ஆய்வுக் கட்டுரைகளுக்கான அறிவிப்பும் அழைப்பும்
கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு ஆய்வுக் கட்டுரைகள் வழங்க அறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
கடந்த 52 ஆண்டுகளாய்த் தமிழ் வெளியில் பல்வேறு வகைமைகளில் இடையறாது இயங்கிவரும் புகழ்மிக்க தமிழ்க் கவிஞரும், இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கிய உலகத்தைப் பகுப்பாய்வு செய்து பதிவுசெய்து கொண்டாடுவதே இப்பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நோக்கம்.
கருத்தரங்கத் தலைப்புகள்
பின்வரும் தலைப்புகளிலோ அல்லது இந்தக் கருப்பொருள்கள் சார்ந்து உங்களுக்குத் தோன்றும் தலைப்புகளிலோ ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
- வைரமுத்து கவிதைகளில் சங்க இலக்கியக் கட்டமைப்பு
- வைரமுத்து கவிதைகளில் குறியீடுகள்
- வைரமுத்து கவிதைகள் முன்னெடுக்கும் சமூகம்
- வைரமுத்து கவிதைகளில் உலக மானுடம்
- மகாகவிதை பேசும் பேரண்டமும் பெருந்தமிழும்
- வைரமுத்து கவிதைகளில் நாட்டார் பாடல்கள்
- கவிதை வரலாற்றில் வைரமுத்துவின் இடம்
- முன்னெப்போதும் பேசாத மொழி
- அறிவியல் சார்ந்த கவிதை வெளி
- வைரமுத்து நாவல்களில் வட்டார வழக்கு
- வைரமுத்து நாவல்களில் மண்ணும் மக்களும்
- கள்ளிக்காட்டு இதிகாசம் பேசும் உலகத் துயரம்
- கள்ளிக்காட்டு இதிகாசமும் புலம்பெயர்தலும்
- கருவாச்சி என்றொரு தமிழச்சி
- மூன்றாம் உலகப்போரும் மூன்றாம் உலக நாடுகளும்
- வைரமுத்து நாவல்களில் மாறும் உலகமும் மாறாத மதிப்பீடுகளும்
- வைரமுத்து நாவல்களில் பண்பாட்டுப் பதிவுகள்
- வைரமுத்து திரைப்பாடல்களில் கவிதை ஆளுமை
- திரை மரபுகளை உடைத்த வைரமுத்துவின் பாடல்கள்
- வைரமுத்து பாடல்களில் அறிவியல் ஆளுமை
- திரைப்பாடல்களில் வைரமுத்துவின் சொற்கொடை
- வைரமுத்து பாடல்களும் சங்க இலக்கியமும்
- வைரமுத்து பாடல்களில் பெண்ணியம்
- வைரமுத்து பாடல்களில் உரத்த குரல்
- வைரமுத்து பாடல்களில் காதல் குரல்
- வைரமுத்து பாடல்களில் மரபு சாரலும் மரபு மீறலும்
- வைரமுத்து பாடல்களில் இதுவரை கேளாத ஆண்குரல்
- வைரமுத்து பாடல்களில் இதுவரை கேளாத பெண்குரல்
- தமிழாற்றுப்படையும் தமிழ் இலக்கிய வரலாறும்
- வைரமுத்து கட்டுரைகள் தரும் புது வெளிச்சம்
- வைரமுத்து உரைநடையில் தமிழ்நடை
- வைரமுத்து கட்டுரைகளில் முன்னெவரும் பாராத பார்வை
- ஆய்வுக்களத்தில் வைரமுத்துவின் பங்கு
- உலகத் தமிழர்களும் வைரமுத்துவின் தமிழும்